--- --:--:-- --

நடிகர் விஜயின் பி‌எம்‌டபில்யு காருக்கு அபராதம் நிறுத்திவைப்பு..!

1

றக்குமதி செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ காருக்கு நுழைவு வரி தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடுத்த வழக்கில் தமிழக வணிக வரித்துறை பதிலளிக்கவும், அபராத வசூல் நிறுத்தி வைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காருக்கு பரிசீலித்து தமிழக அரசின் வணிக வரித் துறை உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

 

அதில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 2005ஆம் ஆண்டு விஜய் வாங்கிய பிஎம்டபிள்யூ காருக்கு நுழைவு வரி 2018 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon