சென்டர் மீடியனில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஒன்று சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியனில் இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்கரை சாலை அருகே உள்ள ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தை முந்த முயற்சிக்கும் போது ஓட்டுனரின் கவனக் குறைவால் அரசு பேருந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் சென்றது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்டர் மீடியனில் பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் அச்சத்துடன் பயணித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





