செல்பியால் லட்சாதிபதியான இளைஞன்..!
தன்னுடைய செல்பிகளை என் எப்டி டோக்கன்கள் ஆக மாற்றி விட்டதன் மூலமாக இளம் வயதில் மில்லியன் ஆக்கியுள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த சுல்தான். பெரும்பாலும் நாம் பதிவிடும் செல்பிக்கு லைக் கமண்ட் ஷேர் போன்றவை வரும். அதைத் தாண்டிப் பார்த்தால் பிரமோஷன் பி என்று வரும்.
ஆனால் வெறும் ஒரு செல்பி காக 2.22 லட்சம் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டோம். அதைப்போலத்தான் சுல்தானும் எதிர்பார்க்கவில்லை. 2017 ஆம் ஆண்டு தன் கல்லூரி நாட்களில் தனது உடல் மற்றும் முகம் நாளுக்கு நாள் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க ஆசைபட்டுள்ளார்.
சுல்தான் இதற்காக தனது வீட்டின் கம்ப்யூட்டர் மானிட்டர் முன்பு உட்கார்ந்து தினமும் ஒரு செல்பி எடுத்து அதை டிசம்பர் 2021 ஆம் ஆண்டு அந்த செல்பிகளை எல்லாம் என்எஃப்டி எனப்படும் டோக்கன்களாக மாற்றி டிஎஃப்டி தளத்தில் விற்பனைக்கு வைத்து தன்னுடைய ஒரு படத்திற்கு மூன்று அமெரிக்க டாலர்கள் என விலையும் நிர்ணயித்துள்ளார் சுல்தான். எனவே, ஒரேநாளில் பணக்காரர் ஆகியுள்ளார்.





