பெண் பக்தர்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமரா..!
தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பெண்கள் குளியல் அறையில் இருந்து மூன்று ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்த நாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோயிலில் உள்ள குளியலறை உடன் கூடிய பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா இருந்ததை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் கோயிலில் உள்ள குளியலறையில் சோதனையிட்டபோது அங்கு இருந்து மேலும் இரண்டு ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
இருப்பினும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது தங்களை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே கேமராவை வைத்து இருக்கிறார் என்று சிசிடிவி கேமராக்கள் பழுதாக இருப்பதால் அவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





