--- --:--:-- --

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை..!

2

கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்த திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, கொரொனா பரவல் கட்டுப்பாடுகளை பின்பற்றி எவ்வாறு நடத்துவது போன்ற கருத்துக்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். மேலும் தேர்தலை நியாயமாக நடத்த துணை இராணுவத்தை பாதுகாப்பு பணியில் இறக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

Right Menu Icon