--- --:--:-- --

தமிழக ஊர்தி நிராகரிப்புக்கு பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

6

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டு அதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். வ.உ.சி., பாரதி, வேலு நாச்சியார் மருது சகோதரர்கள் குடும்பங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி மறுக்கப்பட்டது ஏமாற்றத்தை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் பழங்கால ஓவிய தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகளையும் மத்திய அரசு நிராகரித்து இருப்பதை ஏற்க முடியவில்லை என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Right Menu Icon