மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்கு பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து..!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பாரத ரத்னா எம்ஜிஆர் ஐ அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ள அவர் சமூக நீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக என்று பரவலாக போற்றப்படுவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் 5 வருடங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்ததாக குறிப்பிட்ட மோடி அவரது திரையுலகப் பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுவதாக கூறியிருந்தார்.






