இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற சென்னைவாசிகள் வீடு திரும்புவதற்காக இன்று முதல் 19 ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நீக்கப்பட்ட 15,000 சிறப்பு பேருந்துகளில் சென்னையில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைவாசிகள் வீடு திரும்புவதற்காக இன்று முதல் 19ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்றும் சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக 6,212 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.






