இல்லம் தேடி முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!
A vaccinator administers Pfizer/BioNTech Covid-19 vaccine to a woman at a vaccination centre. Over 88.9% of people aged 16 and over in the UK have received the first dose of a coronavirus and now fully vaccinated (80.4%). (Photo by Dinendra Haria / SOPA Images/Sipa USA)(Sipa via AP Images)
சென்னையில் இதுவரை 414 முதியவர்களுக்கு இல்லம் தேடி சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக வீடுகளுக்கு நேரடியாக தேடிச்சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.
தற்போது வரை சென்னையில் 414 முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.






