--- --:--:-- --

முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்..!

5

முதியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்புடன் இருக்க தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் முதல் இதுவரை கொரொனாவால் உயிரிழந்த 191 பேர் மீது ஆய்வு நடத்தப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல் 163 பேர் 85.3% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டு நோய் உள்ளவர்கள் ஆக 181 பேர் எனவும், 159 பேர் அதிக கூட்டு நோய் பாதிப்பில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

 

191 பேரில் 131 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களே கொரொனா நோயால் உயிரிழந்ததாக ஆய்வுகள் கூறியுள்ளது. உயிரிழக்கும் நிலையில் செல்வதால் முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 

Right Menu Icon