--- --:--:-- --

மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு..!

5

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வீட்டு உபயோக கட்டணம் 0 முதல் 100 யூனிட் வரை 1.56 ரூபாயில் இருந்து 1.90 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை 2.60 ரூபாயிலிருந்து 2.75 ரூபாயாக உயர்ந்துள்ளது. குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றமில்லை எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் 11 ரூபாயில் இருந்து இருந்து 20 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டிடம் 50 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த தொழிலகத்திற்கு யூனிட் ஒன்றுக்கு 5.30 லிருந்து 5.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

Right Menu Icon