--- --:--:-- --

சமைக்க தெரியாததால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையில் மனைவி பலி..!

12

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி பலியான உள்ள நிலையில் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் 19 வயதான லிசா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .

 

அதே பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் விஷ்ணு என்பவரை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டபின் மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அவருக்கு சமையல் தெரியவில்லை என கணவர் விஷ்ணு குற்றம்சாட்டி வந்ததையடுத்து இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி லிசா உடலில் தீப்பற்றி எரிய அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

70 சதவீத தீக்காயங்களுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமைக்கத் தெரியாததால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் இது நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

Right Menu Icon