--- --:--:-- --

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

4

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக இருந்த போதிலும் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அறிகுறி இருப்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ள மகேஷ்பாபு தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Right Menu Icon