இன்று துவங்குகிறது சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்..!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலை, முதுநிலை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளாக தேர்வு நடைபெறுகிறது. கடந்தாண்டு ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் கொரொனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் இந்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் நாளை, நாளை மறுதினம் மற்றும் அதனை 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கொரொனா காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.





