குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
பஞ்சாபில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் சென்றிருந்தபோது விவசாயிகளின் போராட்டம் காரணமாக அவரது வாகனம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என உள்துறை அமைச்சகம் சாடியது. பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி நேரில் சந்தித்து பஞ்சாபில் என்ன நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கேட்டறிந்தார்.





