--- --:--:-- --

இன்று முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி..!

5

ன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை எனவும் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிக்கு செல்லும் போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon