பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம்..!
பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஆயிரத்து 88 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 2 கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற உள்ளதாகவும், இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதை ஒட்டி மாநிலம் முழுவதும் அதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரொனா பரவலை கருத்தில் கொண்டு நியாயவிலை கடைகளில் தினம் காலை மாலை 100 பேருக்கு என நாளொன்றுக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. விரைவாக பொருட்களை வழங்கும் வகையில் விடுமுறை தினமான வரும் வெள்ளிக்கிழமை அனைத்து நியாயவிலை கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





