மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!
கனமழையின் காரணமாக சென்னை மயிலாப்பூர் பகோடா தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் வீட்டுக்குள் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து தண்ணீரை வெளியே எடுக்க முயன்றுள்ளனர்.
தண்ணீர் செல்லும் வழியில் ஏற்பட்டிருந்த அடைப்பை ஜெயபாலன் 13 வயது மகன் லட்சுமணன் அகற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.
அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





