மகாத்மா காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாமியார் அதிரடி கைது..!
மகாத்மா காந்தி கொலை குறித்து விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காளிசரன் மகாராஜ் என்ற சாமியாரை சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்தனர். .சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தர்ம சாஸ்தா என்ற மத கூட்டம் நடைபெற்றது.
இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த காளிசரன் மகாராஜ் என்ற சாமியார் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கியிருந்த காளிசரன் மகாராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.





