இரண்டு வயது ஆண் குழந்தையை கொடூரமாக கடித்த தெருநாய்கள்..!
நெய்வேலியில் இரண்டு வயது ஆண் குழந்தையை தெருநாய்கள் கொடூரமாக கடித்து குதறியது. தற்பொழுது சிறுவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தன் குழந்தைக்கு நேர்ந்தது போல எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது என சுருக்கமாக வாட்ஸ்அப் பதிவை வெளியிட்டு இருக்கிறார் சிறுவனின் தாய்.நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழரசி, சபரிநாத் தம்பதிக்கு இரண்டு வயதில் மகன் இருக்கிறார்.
தாத்தா வீட்டில் சிறுவன் இருந்துள்ளான். தாத்தாவுடன் சிறுவன் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். தாத்தா தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் அங்கிருந்த தெருநாய்கள் சிறுவனை கடித்து குதறி உள்ளது.
இதில் குழந்தையின் தாய் உருக்கமான பதிவை வாட்ஸப்பில் வெளியிட்டுள்ளார். சாலைகளில் திரியும் நாய்களை பிடிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.





