7 வயது சிறுமிக்கு 63 வயது முதியவர் பாலியல் தொல்லை..!
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சேலை வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை பகுதியை சேர்ந்த ராஜா என்று சேலை வியாபாரி சேலைகள் விற்பனை செய்துகொண்டிருந்த போது வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதை சிறுமி தாயாரிடம் கூறவே அவர் வல்லம் அனைத்து மகளிர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சேலை வியாபாரியை கைது செய்தனர்.





