ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் உயரும்..!
இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் என லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரங்களை தெரிவிக்கும் கோவிட் 19 இந்தியன் டிராக்கரை வடிவமைத்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரொனா பாதிப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்த நிலை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





