--- --:--:-- --

காமப்பசிக்கு சிசுவை பலி கொடுத்த ‘திருப்பூர்’ தாய்! நெஞ்சை பிளக்க வைக்கும் தஞ்சை கொலை…

kk

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில், நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது,  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. மிகவும் பழமையாக மற்றும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக, இது திகழ்ந்து வருகிறது.  இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனை வளாகத்தில், அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.   இந்த வளாகத்தில் நவீன கழிப்பறை வசதியுண்டு.

 

புகழ்பெற்ற தஞ்சை மருத்துவக்கல்லூரியில், இரு தினங்களுக்கு முன்பு அரங்கேறிய சிசுக்கொலை, தமிழகத்தையை பரபரப்பாக்கி இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கடந்த 4ஆம் தேதி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவில் வழக்கம் போல் தூய்மைப்பணியாளர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கழிவறை ஒன்றி,  தண்ணீர் தொட்டிக்குள் (Flush Tank), பிறந்த பெண் சிசு, தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை கண்டு, அதிர்ந்து போனார்கள்.

 

உடனடியாக, மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி,  மருத்துவக்கல்லூரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிக்கு விரைந்த போலீசார், சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டனர்.  அத்துடன், தொப்புள் கொடியுடன் குழந்தையை கழிவறை தொட்டிக்குள்  போட்டது யார்? போலீசார் விசாரித்தனர்.

 

முதலில்,  மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வருகைப்பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் அன்றைய தினம் சுமார் 250 பேர் வந்தது தெரிய வந்தது. இதில், சந்தேகத்திற்கிடமான் 30 பேரை கண்டுபிடித்தனர்.  அதில், தகவல் தெரிவிக்காமல் வெளியே சென்ற 20 பேரை, சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே,  சிசிடிவி கண்காணிப்பு கேமாரா பதிவுகளை ஆய்வு செய்ததில்,  ஒரு பெண் தலையில் முக்காடு போட்டபடி, அங்குமிங்கும் திரிவதும்,  சந்தேக்கிக்கும் வகையில், சுமார் அரைமணி நேரம், கழிவறையில் இருந்துள்ளதும் தெரிய வந்தது. சொல்லாமல் போன 20 பேரில் அவரும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, அதன் அடிப்படையில்,  அப்பெண் யார் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில், அந்த பெண் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த, பன்னீர் செல்வத்தின் மகளான, 24 வயது  பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது.  அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்தன.  அப்பெண்ணிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. அதே நேரம் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்துள்ளார்.

 

திருமணமாக பிரியதர்ஷினிக்கு,   திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. காமப்பசி தலைக்கேற, குடும்பச்சூழலை மறந்து, இருவரும் உல்லாசம் இருந்து வந்துள்ளனர். இந்த தவறான உறவின் விளைவாக பிரியதர்ஷினி கர்ப்பமானார். இதனால், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, அந்த நபரை வலியுறுத்தி வந்துள்ளார்; ஆனால் அவரோ சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரை சம்மதிக்க வைப்பதற்காக, கர்ப்பத்தை அவர் கலைக்காமல் இருந்து வந்துள்ளார்.

 

இதனிடையே, நாளடைவில் கர்ப்பிணியின் வயிறு பெரிதாகி வரவே,  பயந்து போன பிரியதர்ஷிணி, வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று தவித்தார். மேலும், தனக்கு வேறு நோய் இருப்பதாகக்கூறி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்து கொண்டார். அங்கு பிரசவ வலி அதிகரிக்கவே,  பிரியதர்ஷிணிக்கு ஒன்றும் புரியவில்லை.

உடனடியாக, அவசரப்பிரிவு கழிவறைக்கு சென்ற அவர், அங்கு சுயமாகவே பிரசவம் பார்த்துக் கொண்டார்; இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  எனினும்,  குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பினால், குடும்ப மானம் போய்விடுமே என்று பயந்த அவர்,  கல் நெஞ்சத்துடன் ஒருமுடிவுக்கு வந்தார்.  அதன்படி,  கழிவரை ப்ளஷ் டேங்கில்  (flush tank) குழந்தையை, தொப்புள் கொடி சுற்றிய நிலையில் உயிருடன் தண்ணீரில் அழுத்தி போட்டுவிட்டு, சந்தேகம் ஏற்படாதபடி, மருத்துவமனை வளாகத்தில் இருந்து வந்துவிட்டார் என்பது , போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரிய தர்ஷிணியை கைது செய்த போலீசார்,   இச்சம்பவத்திற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருக்கலாம் என்ற அடிப்படையில்,   அவர்களையும் விசாரணை செய்து வருகின்றனர். முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை, தாயே கழிவறையில் மூழ்கடித்து கொன்ற விவகாரம், தஞ்சையை மட்டுமின்றி, தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.  இந்த விவகாரத்தில், திருப்பூரை சேர்ந்த அந்த காதலன் யார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon