காய்ச்சலுக்காக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு குவிந்த மக்கள்..!
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கனமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற நூற்றுக்கணக்கான மக்கள் புறநோயாளிகள் பிரிவில் குவிந்தனர். அதனால் பல இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
எனவே மாவட்டம் முழுவதும் தண்ணீர் தேங்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






