--- --:--:-- --

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்..!

5

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நலமணி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் நந்தினி தம்பதி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.

 

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகராறு ஏற்பட்ட நிலையில் மரம் வெட்டும் தொழிலாளியான 27 வயது தமிழ்ச்செல்வன் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

 

அவர் தலைமறைவான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலையான பெண்ணின் கணவன் தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon