நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு..!

டிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக திரைத்துறையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்று கடந்த நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றதாகவும், இந்நிலையில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை தான் சந்தித்ததாகவும் திரைத் துறையில் சாதனை படைத்திருக்கிறீர்கள் எனக்கூறியதாகவும், ஆனால் தனது வாதத்தை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதாகவும் தன்னையும் தனது ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறப்பட்டுள்ளது.

 

விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய போது அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தம்முடைய செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.