--- --:--:-- --

கத்ரீனா கைஃப்பை மணக்கப்போகும் நடிகர்..! சல்மானுக்கு இன்விடேசன்..!

3

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் தன் முன்னாள் காதலரான சல்மான்கானுக்கு திருமண அழைப்பிதழ் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரினா கைப்பும் ஒரு காலத்தில் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

 

காதல் முறிவுக்கு பிறகு இருவரும் நண்பர்களாக உள்ளனர் சேர்ந்து நடிக்கின்றனர். அவரது காதலரான நடிகர் விக்கிக்கும் இந்த மாதம் ஜெய்பூரில் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் சல்மான் கான் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கத்தரினா அழைப்பிதழ் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய பாலிவுட் வட்டாரம் சல்மான் எப்பொழுதுமே கத்தரினா மீது பாசமாக இருப்பவர், அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்புவர், திருமணம் முடிந்த பிறகு பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொள்வார் எனவும் தனிப்பட்ட வாழ்க்கையை வேலைக்குள் கொண்டு வர மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon