ஓமிக்ரான் அச்சத்தால் தமிழக பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..!
கொரொனா வைரஸ் பரவல் எதிரொலியாக தற்போது பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்களில் இறைவணக்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள், தேசிய மாணவர் நிகழ்ச்சிகள், நாட்டு நலப்பணித்திட்ட செய்தல் ஆகியவற்றை தவிர்க்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி பள்ளியில் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.






