கல்லூரிக்குள் புகுந்து மாணவரை தாக்கிய சிறுத்தை..!
கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவர் ஒருவரை கடித்து காயப்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாரா என்ற பகுதியில் கல்லூரிக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது.
வகுப்பறையில் சிறுத்தை வந்த காட்சிகள் கேமராவில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் ஒரு மாணவர் சிறுத்தையால் தாக்கப்பட்டு காயமடைந்தார். தப்பியோடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.






