--- --:--:-- --

கங்கனாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

9

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூகவலைத்தள பதிவுகளை தணிக்கை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

ரஞ்சித் சிங் சந்தர்பால் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் சீக்கியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கங்கணா பதிவிட்டு இருந்ததை குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துரிமையை சமூக வலைதளங்களில் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய கங்கனா ரனாவத் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க கோரி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon