நீலகிரியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா..!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விடுதியில் தங்கியிருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் விடுதியில் தங்க வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பணிபுரியும் பணியாளர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மற்ற ஐந்து பணியாளர்கள் மற்றும் 114 மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.






