குருத்வாராவில் புகைப்படம் எடுத்த மாடல் அழகிக்கு எதிர்ப்பு..!
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித இடமான குருத்வாராவில் மாடல் அழகி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது.
அங்கே இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் உடைகளை விளம்பரம் செய்ய புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக பெண்கள் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது குருத்வாராவின் மரபு. அதையும் மீறி முடி தெரியும்படி போஸ் கொடுத்துள்ள மாடல் அழகியின் புகைப்படம் வேகமாக பரவியதால் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாராவை நிர்வகிக்கும் குழுவின் தலைவருமான மஞ்சிதர் சிங் குருணாநக் தேவ்வின் புனித இடத்தில் பெண் ஒருவர் அநாகரிகமாக நடந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதம் சார்ந்த இடத்தில் அவரால் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா எனவும் அவருக்கு அந்த துணிச்சல் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
குருத்வாரவை ஒரு சுற்றுலா இடமாக மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





