--- --:--:-- --

கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய காவலர்..!

8

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆதி கோபாலபுரம் பகுதியில் நாகார்ஜுன சாகர் கால்வாயில் இரண்டு சிறுவர்கள் குளிக்க சென்றனர்.

 

அப்போது அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த காவலர் பிரவீன்குமார் அதை கவனித்துள்ளார். உடனடியாக பிரவீன் குமார் நண்பர்களின் உதவியுடன் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அவர்களை பிடிக்குமாறு கூறி காப்பாற்றினார்.

 

தொடர்ந்து சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon