கொரொனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்..!
தமிழகத்தில் கொரொனா மூன்றாம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான போதிய கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நிறுவனம் அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச விழாவில் அமைச்சர் சுப்பிரமணியனுக்கு மருத்துவர் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன் வாயிலாக பங்கேற்று பேசியவர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் கொரொனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்டார்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாக மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.






