விபத்திற்கு பிறகு முதன்முறையாக கையில் ஸ்டிக் உடன் வந்த யாஷிகா..!
விபத்திற்கு பிறகு முதன்முறையாக யாசிகா வெளியே வந்தபோது நடந்துவந்த வீடியோ வெளியானதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராசிகா தன் தோழிகள் இரண்டு பேருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் காரில் சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானதில் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா அனுமதிக்கப்பட்டு மெல்ல மெல்ல குணமாகி வந்தார்.
குணமாக 5 வாரங்கள் ஆகும் என்று அவர் கூறிய நிலையில் அவர் பொது இடத்திற்கு முதன் முறையாக வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மஞ்சள் நிற உடையில் கையில் ஸ்டிக் வைத்துக்கொண்டு யாஷிகா நடந்து வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






