--- --:--:-- --

சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

5

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் மற்றும் அவரது மனைவி சூரியா ஆகியோருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர்.

 

அதிகாலை வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை படுகாயமடைந்தது. தாயாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon