திருப்பூரில் இரவு பெய்த கனமழை: 15 வேலம்பாளையம் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்
திருப்பூர் மாவட்டத்தில் இரவு பெய்த கனமழை காரணமாக மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
15 வேலம்பாளையம் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒரு பக்கமாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளும் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாக, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடா்ந்து எம்எல்ஏ விஜயகுமார் அறிவுறுத்தலின்படி 14-வது வார்டு வட்டக் கழக செயலாளர் தங்கராசு அங்கு வந்து, 1-வது மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து துப்புரவு பணியாளர்கள் சாலையில் தேங்கி நின்ற மழைநீரை உடனடியாக அகற்றம் செய்தனர்.
-திருப்பூா் எம்.ராஜா






