முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கி பெண் மரணம்..!
முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கிய அவரது சகோதரி மகள் லீலாவதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுகவினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 72 வயதான லீலாவதி சென்னை பெருங்குடியில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்து வந்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. லீலாவதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீலாவதி மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லீலாவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.





