கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கை விட்ட இளைஞர்..!
கரும்பு ஜூஸ் மெஷினுக்குள் கை விட்டால் எப்படி இருக்கும் என பேசிக்கொண்டே கைவிரல்களை மெஷினுக்குள் விட்ட வடமாநில இளைஞரின் பத்து விரல்களும் நசுங்கிப் போய் உள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மனுகோசுவாமி என்ற இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறான். இவன் கரூர், திண்டுக்கல் சாலையில் உள்ள கரும்பு ஜூஸ் கடையில் தனது நண்பருடன் ஜூஸ் குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது மனுகோசுவாமி ஜூஸ் குடிக்க வந்த வேலையை மட்டும் பார்க்காமல் தன் நண்பரிடம் விளையாட்டாக இந்த கரும்பு ஜூஸ் மெஷினுக்குள் கையை விட்டால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார். கேட்பது மட்டுமின்றி விளையாட்டாகப் பேசிக் கொண்டே தனது இரு கைகளையும் மெஷினுக்குள் விட்டுள்ளார்.
அவரே எதிர்பாராமல் மெஷினுக்குள் கைவிரல்கள் பத்தும் மாட்டியது. இதில் மனுகோசுவாமி பத்து விரல்களும் நசுங்கியது. வலி தாங்க முடியாமல் அழுது புரண்டார். பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மெஷினுக்குள் விரல்கள் போய்விட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.






