கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள கமல்ஹாசன் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய பின் லேசாக இருமல் இருந்ததாகவும் அதில் தொற்று உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





