--- --:--:-- --

பிரபல நடிகர் ஆர்‌என்‌ஆர் மனோகர் காலமானார்..!

11

நடிகரும், இயக்குனரும், கதாசிரியருமான ஆர்‌என்‌ஆர் மனோகர் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59. 1991ஆம் ஆண்டு மனிதன் படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குனராகவும் அறிமுகமானவர்.

 

கோலங்கள் படத்தில் கதாசிரியராக இருந்தவர் அந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் புதுமைப்பித்தன், வந்தே மாதரம் ஆகிய படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

 

அதைப்போல மிருதன், கவண், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வாசம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் மனோகரன் நடித்துள்ளார். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon