இனி ஒரு வாரத்தில் 2 நாட்கள் கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெறும்..!
தமிழகத்தில் இனி வாரம் இரண்டு நாட்கள் கொரொனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழகத்தில் வாரம் ஒருமுறை மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமும் தடுப்பூசி தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இனிவரும் நாட்களில் வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொதுமக்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.
வாரம் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






