பருவமழையை பேரிடராக மாற்றுவதா என கமல்ஹாசன் கேள்வி..!
நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் துணிந்து தட்டிக்கேட்க வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தரமணி தந்தை பெரியார் நகரில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று அங்குள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கமல்ஹாசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் பருவமழையை பேரிடராக மாற்றுவதா என கேள்வி எழுப்பினார்.






