மீண்டும் கொரொனா பரவல் அதிகரிக்கிறதா..?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பால் 506 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 14 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. பெருந்தொற்று பாதித்த ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 416 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 13, 155 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 14 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 506 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.






