சீரியல் நடிகை ஷபானாவுக்கு தீடீர் திருமணம்..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷபானா. சீரியல் ஒளிபரப்பு செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே தமிழ் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் மற்றொரு சீரியலில் நடித்த ஆர்யன் என்பவரை காதலித்து வந்துள்ளார். சமூக வளைதளத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. ஷபானா ஆர்யன் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷபானா வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டுள்ளார்.






