தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..!
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






