--- --:--:-- --

உங்கள் இடத்திற்கே வந்து சந்திப்பேன் என கூறிய சசிகலா..!

4

உங்களையெல்லாம் நேரில் சந்திக்க வர உள்ளதாக அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தன்னை நேரில் சந்திக்க வருபவர்கள் மலர் கொடுத்து பொன்னாடை போர்த்தி தனக்கு பரிசு வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு ஏதேனும் செய்ய விரும்பினால் தாங்கள் வாழும் இடத்திற்கு அருகே உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வதே தனக்கு அளிக்கும் சிறந்த பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் அனைவரது ஒற்றுமையின் ஒப்பற்ற அன்பு மட்டுமே தனக்கு வேண்டும் என்றும், உங்களை எல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே வந்து சந்திக்க உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon