--- --:--:-- --

இரவு நேர பொது ஊரடங்கு வாபஸ்..!

3

கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த இரவு நேர பொது ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. கொரொனா தொற்றின் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர பொது முடக்கம் அமலில் இருக்கிறது.

 

கடந்த சில மாதமாக இந்தியாவில் கொரொனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட இந்த பொது முடக்கம் என்பது தொடர்ச்சியாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது திரும்ப பெறப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

 

மேலும் குதிரைப் பந்தயங்கள் நடத்தலாம் எனவும் ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon