மனைவியை அடித்து துன்புறுத்தி கருவை கலைத்த கணவன்..!
சென்னையில் மனைவியை அடித்து துன்புறுத்தி கருவை கலைத்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த சசிகுமார் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.
வண்ணாரப்பேட்டை சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்துவதாக 4 மாத காலமாக புகார் எழுந்து வந்துள்ளது.
தொடர்ந்து மனைவி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.






