காக்க காக்க படத்தின் அடுத்த பாகம் தயாராகிறதா..?
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் படம் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க படத்தில் அடுத்த பாகமா என்றும் கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் மேனன் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கு அன்புச்செல்வன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






